முகக்கவசமின்றி வெளியே வருவதால் உங்கள் உயிர் மட்டுமின்றி குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து: மோடி

 

முகக்கவசமின்றி வெளியே வருவதால் உங்கள் உயிர் மட்டுமின்றி குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து: மோடி

கொரோனா காலத்தில் இதுவரை பிரதமர் மோடி 6 முறை உரையாற்றியுள்ளார். இந்நிலையில் 7 ஆவது முறையாக இன்று பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த முறை என்ன ஸ்பெஷல் என்றால் பதிவு செய்யப்பட்ட உரையாக இல்லாமல் நேரலையில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசினார்.

டெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, “நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைக்கு 2 ஆயிரம் ஆய்வகங்களும், சிகிச்சை பல லட்சம் மையங்களும் உள்ளன. கொரோனா சிகிச்சைக்கு நம் நாட்டில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதால் அச்சப்பட தேவையில்லை. மனிதனைக் காப்பாற்ற உலக அளவில் போர் போன்ற கடும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியா மேற்கொண்ட அதிகளவிலான பரிசோதனை கொரோனா போரில் முக்கிய ஆயுதமாக இருந்தது.

முகக்கவசமின்றி வெளியே வருவதால் உங்கள் உயிர் மட்டுமின்றி குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து: மோடி

கொரோனா பாதிப்பு குறைவதைக் கண்டு பலர் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக நடந்து கொள்வதை காண்கிறோம். கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அலட்சியம் காட்டாமல் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். எச்சரிக்கையாக இருக்க தவறுவோர் பாதிக்கப்படுவதுடன் மற்றவர்களுக்கும் அவர்கள் பாதிப்பு ஏற்படுத்துகின்றனர். கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடர்கிறது. பண்டிகை காலத்தை முன்னிட்டு நாம் அனைவரும் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனாவை வேரோடு வீழ்த்தும் வரை அதற்கெதிரான இந்தியர்களின் போராட்டம் முடிவடையாது. கொரோனா தொற்று இனி இல்லை என அண்ணி அஜாக்கிரதையாக இருந்துவிட வேண்டாம், கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து ஆராய்ச்சியி குறிப்பிடதக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.” எனக் கூறினார்.