‘புதியக் கல்விக் கொள்கை’ மாநிலங்களின் கருத்துக்கள் கேட்கப்படும்: ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் உரை!

 

‘புதியக் கல்விக் கொள்கை’ மாநிலங்களின் கருத்துக்கள் கேட்கப்படும்: ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் உரை!

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசிக்க டெல்லியில் நடைபெறும் ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை செய்ய டெல்லி ராஜ்பவனில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆளுநர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த மாநாட்டில். பல மாநிலங்களை சேர்ந்த ஆளுநர்கள், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பல்வேறு பல்கலைக்கழக துணைவேந்தர்ள் மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றுள்ளனர்.

‘புதியக் கல்விக் கொள்கை’ மாநிலங்களின் கருத்துக்கள் கேட்கப்படும்: ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் உரை!

இந்த மாநாட்டில் அனைத்து மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கை குறித்து தங்களது கருத்துக்களை எடுத்துரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், புதியக் கல்விக் கொள்கை மற்றும் கல்விக்கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது என்றும் இதனை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன என்றும் 21ஆம் ஆண்டில் இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார அம்சத்திற்கு புதிய திசையை வழங்கும் என்றும் கூறினார்.

தொடர்ந்து, புதிய கல்விக் கொள்கையை ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்களது கல்வி கொள்கையாக ஏற்றுக் கொண்டதாகவும் மத்திய மாநில அரசுகள் மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கல்வியில் பங்கு உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், கல்விக் கொள்கை படிப்பை கற்றுக் கொடுப்பதை விட திறனை வளர்க்க முன்னுரிமை கொடுப்பதாகவும் பரீட்சைகள் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை தவிர்க்க உதவும் இந்த கொள்கை பற்றி அனைத்து மாநிலங்களிடம் முடிவு கேட்டு தீர்வு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.