“வரலாறு படைத்துள்ளீர்கள்” – ஹாக்கி கேப்டனுக்கு சர்ப்ரைஸ் கால் செய்து வாழ்த்திய பிரதமர் மோடி!

 

“வரலாறு படைத்துள்ளீர்கள்” – ஹாக்கி கேப்டனுக்கு சர்ப்ரைஸ் கால் செய்து வாழ்த்திய பிரதமர் மோடி!

ஹாக்கியை உருவாக்கியது என்னவோ இந்தியா தான். ஆனால் நம்மிடம் ஆட்டத்தைக் கற்றுக்கொண்டு உலகின் பல நாடுகள் சர்வதேச அரங்கில் நம்மை விஞ்சி நிற்கின்றனர். நாமோ காலிறுதிக்குள் செல்வதே பெரும் சாகசமாக இருக்கிறது. இது தொடர் கதையாகிப் போனதுதான் இந்தியர்களின் ஏமாற்றத்திற்கும் ஏக்கத்திற்கும் காரணமாக அமைந்தது. ஒலிம்பிக்கில் அதிக போட்டிகளில் வென்ற Most Successfull அணி, 8 தங்கங்களை வென்ற அணி, இரு ஒலிம்பிக்கில் ஒரு கோல்களைக் கூட அடிக்கவிடாத அணி என பல்வேறு பெருமைகள் இந்தியா வசம் இருந்தாலும், பதக்கங்கள் தவறிப் போவது பெரும் கரும்புள்ளியாக இருந்தது.

“வரலாறு படைத்துள்ளீர்கள்” – ஹாக்கி கேப்டனுக்கு சர்ப்ரைஸ் கால் செய்து வாழ்த்திய பிரதமர் மோடி!

1980ஆம் ஆண்டு பாஸ்கரன் தலைமையிலான இந்திய அணி ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருந்தது. ஆனால் அதிலிருந்து கடந்த 41 வருடங்களாக ஹாக்கியில் இந்தியாவிற்கு எந்தவொரு பதக்கமும் கிடைக்கவில்லை. தகுதிச்சுற்று, காலிறுதிச் சுற்று என பாதியிலேயே வெளியேறி பதக்கத்தைக் கைநழுவ விடும். ஹாக்கியை உருவாக்கிய ஒரு நாடு ஒலிம்பிக்கில் ஒரு வெண்கலப் பதக்கம் கூட வெல்ல முடியாதது பல்வேறு அவமானத்துக்குள்ளாகியது. இந்த அவமானங்களைத் துடைத்தெரியும் பொருட்டு இன்று இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணியும் களமிறங்கின.

“வரலாறு படைத்துள்ளீர்கள்” – ஹாக்கி கேப்டனுக்கு சர்ப்ரைஸ் கால் செய்து வாழ்த்திய பிரதமர் மோடி!

நினைத்தது போலவே ஆடவர் அணி ஆஸ்திரேலியாவுடனான போட்டியைத் தவிர்த்து மற்ற அனைத்துப் போடிகளிலும் அதிரிபுதிரி வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. காலிறுதியிலும் சிறப்பாக விளையாடி பலம்வாய்ந்த பிரிட்டனை வீழ்த்தி 41 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்த வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாடி தீர்த்தது. மகளிர் அணியைப் பொறுத்தவரை தொடர் தோல்விகள், வெறித்தன கம்பேக் என ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது.

இந்திய ஆடவர் அணி அரையிறுதியில் பெல்ஜியத்தின் கோல் மழையால் தோல்வியுற்றது. இச்சூழலில் இன்று வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஜெர்மனியுடன் மோதியது. தொடக்கம் முதலே பதக்கம் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் விளையாடிய இந்திய வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். வாழ்வா சாவா ஆட்டம் என்பதால் ஜெர்மனியும் பதிலடியை கோல்கள் மூலம் அளித்தது. இருப்பினும் கடைசி நிமிடம் வரை போராடி 5-4 என்ற கோல் கணக்கில் இந்தியா வரலாற்று வெற்றிபெற்றது. 41 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்தது.

இந்தியாவின் வரலாற்று வெற்றியைக் கொண்டாடும் வகையில் குடியரசுத் தலைவர், பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோடி ட்விட்டரில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தார். அது மட்டுமில்லாமல் இந்திய அணி கேப்டன் மன்பிரீத் சிங், பயிற்சியாளர் கிரஹம் ரீடிற்கு ஆகியோரிடம் போனிலும் பேசினார். அப்போது அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த மோடி ஒட்டுமொத்த இந்தியாவும் மகிழ்ச்சியில் இருப்பதாகவும், இது இந்திய ஹாக்கி அணி தீவிரமாக உழைத்து வரலாறு படைத்துள்ளதாகவும் புகழாரம் சூட்டினார். அதற்கு அவர்கள் இருவரும் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.