ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி… எதிர்கால தொழில்நுட்பங்கள் ஆசியாவிலிருந்து வர வேண்டும்… மோடி

 

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி… எதிர்கால தொழில்நுட்பங்கள் ஆசியாவிலிருந்து வர வேண்டும்… மோடி

நம் நாட்டில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக ரூ.1,000 கோடி மதிப்பில் சிறப்பு நிதியை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் 2016 ஜனவரி 16ம் தேதியன்று ஸ்டார்ட்அப் இந்தியா என்ற திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இந்த திட்டத்தின்கீழ் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் துவங்குவதை ஊக்குவிக்க ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை 2 நாள் நடைபெறும் தி பிராரம்ப்: ஸ்டார்ட்அப் இந்தியா இன்டர்நேஷனல் உச்சி மாநாட்டை நடத்தியது. இதில் 25 நாடுகளை சேர்ந்த வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி… எதிர்கால தொழில்நுட்பங்கள் ஆசியாவிலிருந்து வர வேண்டும்… மோடி
பிரதமர் மோடி

இந்த உச்சி மாநாட்டின் இறுதி நாளான நேற்று வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது: இந்தியாவில் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.1,000 கோடி ஸ்டார்ட்-அப் ஸீட் நிதியம் என்ற சிறப்பு நிதியை நாங்கள் தொடங்கிறோம். புதிதாக தொழில் தொடங்குவோருக்கு அரசு ரூ.1,000 கோடி வழங்கும். இளைஞர்களின், இளைஞர்களால், இளைஞர்களுக்காக என்ற மந்திரத்தை அடிப்படையாக கொண்டு ஒரு ஸ்டார்ட்அப் அமைப்பை உருவாக்க முயற்சிக்கிறோம். தொற்றுநோய்க்கு மத்தியில் பெரிய நிறுவனங்கள் தொழிலில் தாக்குப்பிடிப்பது குறித்து சிந்திக்கும்போது, சுயசார்ப்பு கொண்ட இந்தியாவின் இயக்கத்தை ஸ்டார்ட்அப்ஸ் இயக்குகின்றன.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி… எதிர்கால தொழில்நுட்பங்கள் ஆசியாவிலிருந்து வர வேண்டும்… மோடி
ஸ்டார்ட்அப்

உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியாவில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன. இதில் சுமார் 5,700 ஸ்டார்ட்அப்ஸ் ஐ.டி. துறையிலும், 3,600 ஸ்டார்ட்அப்ஸ் சுகாதார துறையிலும், 1,700 ஸ்டார்ட்அப்ஸ் வேளாண் துறையிலும் செயல்பட்டு வருகின்றன. இந்த ஸ்டார்ட்அப்ஸ் நிறுவனங்கள் வர்த்தகத்தின் மக்கள்தொகை தன்மையை மாற்றி வருகின்றன. முன்பு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கியவரிடம் ஏன் வேலையை செய்யக்கூடாது மக்கள் என்று கேட்டார்கள்? ஆனால் இப்போது வேலை செய்வதற்கு பதில் ஏன் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கக்கூடாது என்று மக்கள் சொல்கிறார்கள். இது டிஜிட்டல் புரட்சியின் காலம். புதிய கால கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோர் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது காலத்தின் தேவையாகும். எதிர்கால தொழில்நுட்பங்கள் ஆசிய ஆய்வகங்களிலிருந்து வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.