ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி தேர்தல்… நாட்டுக்கு அவசியம்… மோடி வலியுறுத்தல்

ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி தேர்தல்… நாட்டுக்கு அவசியம்… மோடி வலியுறுத்தல்

ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது நாட்டுக்கு அவசியம் என்று பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்திய தலைமை அலுவலகர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது: ஒவ்வொரு சில மாதங்களுக்கும், நாட்டின் ஒரு பகுதியில் தேர்தல்கள் நடப்பதை பார்க்கிறோம். வளர்ச்சியில் இந்த தேர்தல்கள் என்ன பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி தேர்தல்… நாட்டுக்கு அவசியம்… மோடி வலியுறுத்தல்
பிரதமர் மோடி

இந்த விவகாரத்தில் ஆழ்ந்த ஆய்வு மற்றும் விவாதம் அவசியம். தலைமை அதிகாரிகள் இத்தகைய விவாதங்களுக்கு இத்தகைய விவாதங்களுக்கு வழிவகுக்கலாம் என்று நான் பரிந்துரை செய்கிறேன். மேலும் ஒவ்வொரு மட்டத்திலும் பொதுவான வாக்காளர் பட்டியலை பயன்படுத்தி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி தேர்தல்… நாட்டுக்கு அவசியம்… மோடி வலியுறுத்தல்
சி.பி.ஐ., காங்கிரஸ்

2015ம் ஆண்டில் பிரதமர் மோடி ஒரு நாடு ஒரே தேர்தல் யோசனையை முன்வைத்தார். மேலும் இது பாரதி ஜனதா கட்சியின் நிகழ்ச்சி நிரலிலும் உள்ளது. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு கடும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக விவாதிக்க கடந்த ஆண்டு பிரதமர் மோடி ஏற்பாடு செய்த கூட்டத்தை காங்கிரஸ் புறக்கணித்தது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை மாற்றுவதற்கான பின்புற வழி இது என்று இடதுசாரிகள் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.