கடந்த காலங்களில் நிகழ்ந்தவை தவறு என்பதை இந்துக்களிடம் மோடி சொல்ல வேண்டும்.. ஹூசைன் தல்வாய்

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம், இன்று உலகம் அசாரண சவால்களை எதிர்த்து போராடுகிறது. இந்த சவால்களுக்கு புத்தரின் கொள்கைளிலிருந்து தீர்வு கிடைக்கலாம். புத்தரின் கொள்கைள் கடந்த காலத்துக்கும் பொருந்தும், நிகழ்காலத்துக்கும் பொருந்தும், எதிர்காலத்துக்கும் பொருந்தும் என தெரிவித்து இருந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹூசைன் தல்வாய் மோடியின் கருத்தை வரவேற்பதாக தெரிவித்தார். மேலும் தொடர்பாக அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பிரதமர் மோடி

முன்பு புத்த மதத்தினர் அதிகம் பேர் இருந்தனர். அவர்கள் மிகவும் நல்ல பணிகளை செய்தனர். ஆனால் ஆதி சங்கராச்சாரியார் காலத்தில் அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அதனால்தான் அவர்கள் சீனா, ஜப்பான் மற்றும் இதர பகுதிகளுக்கு சென்றனர். கடந்த காலத்தில் நடந்தவை அனைத்தும் தவறு என்றும் கண்டிக்கப்பட வேண்டும் என்பதை பிரதமர் இந்துக்களிடம் சொல்ல வேண்டும்.

புத்த துறவிகள்

மக்களை பிளவுப்படுத்தாமல், உடன் அழைத்து செல்ல வேண்டும் என்பதை அவர் உறுதி செய்ய வேண்டும். லடாக் மக்கள் சொல்வதை அரசாங்கம் கேட்க வேண்டும். அந்த பிராந்தியத்தில் சீன வீரர்கள் இருக்கிறார்களா என்பதை சரிபார்க்க வேண்டும், சீனாவுக்கு பதிலடி கொடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- Advertisment -

Most Popular

அஜித் தோவலை களமிறக்கிய பிரதமர் மோடி… எல்லையில் படைகளை பின்வாங்கும் சீனா…

கடந்த மாதம் முதல் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீன ராணுவம் படைகளை குவித்து வந்தது. இதனையடுத்து நமது ராணுவமும் எல்லையில் படைகளை குவித்தது. இதனால் இந்திய-சீன எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பதற்றம் நிலவியது....

வருவாய் துறையை சிந்தியா ஆதரவாளர்களுக்கு மட்டும் கொடுக்காதீங்க… பா.ஜ.க. முதல்வருக்கு காங்கிரஸ் கோரிக்கை

மத்திய பிரதேசத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. முதல்வர் கமல் நாத்துக்கும், அப்போது காங்கிரஸில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து சிந்தியா தனது ஆதரவு...

ஆகஸ்ட் 15க்குள் கோவிட்-19க்கான தடுப்பூசி அறிமுகம்… காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கிண்டல்

பாரத் பயோக்டெக் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்தான கோவாக்சின் தடுப்பூசியை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி...

தேசத்தை இழிவுப்படுத்துகிறார்.. எதிர்கட்சி தலைவர் செய்யக்கூடாத அனைத்தையும் செய்கிறார்.. ராகுலை தாக்கிய நட்டா

எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் மற்றும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என மத்திய அரசு உறுதியாக சொல்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ எல்லையில் இந்திய பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக குற்றம் சாட்டி வருகிறது. இந்த சூழ்நிலையில்...
Open

ttn

Close