தமிழகத்தை சேர்ந்த சிறுமியை 4 ஆண்டுகளாக படிக்க வைக்கும் பிரதமர் மோடி!

 

தமிழகத்தை சேர்ந்த சிறுமியை 4 ஆண்டுகளாக படிக்க வைக்கும் பிரதமர் மோடி!

திருவாரூரை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு பிரதமர் மோடி கடந்த நான்கு ஆண்டுகளாக உதவி செய்துவருகிறார்.

திருவாரூர் மாவட்டம் பவித்ரமாணிக்கம் கிராமத்தில் உள்ள திருவிக நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது மகள் ரக்‌ஷிதாவை அப்பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிக்க ஆசைப்பட்டார். ஆனால் அப்பள்ளியில் ரக்‌ஷிதாவுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த குணசேகரனும், ரக்‌ஷிதாவும், தங்களுக்கு உதவி செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். அந்த கடிதம் பிரதமர் மோடியின் கைக்கு செல்ல அதே பள்ளியிலேயே இடம் ஒதுக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு மோடி உத்தரவிட்டார். இதையடுத்து ரக்‌ஷிதா அப்பள்ளியில் சேர்ந்தார். ஆனால் அப்பள்ளியில் கேட்கும் கல்வி கட்டணத்தை குணசேகரனால் கட்ட முடியவில்லை. இதனால் ரக்‌ஷிதாவை வகுப்பு வெளியே நிற்க வைத்தது பள்ளி நிர்வாகம். இதனையறிந்த குணசேகரன் மீண்டும் தங்களுக்கு உதவுமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

தமிழகத்தை சேர்ந்த சிறுமியை 4 ஆண்டுகளாக படிக்க வைக்கும் பிரதமர் மோடி!

இதையறிந்த பிரதமர் மோடி, ரக்‌ஷிதாவின் கல்விக் கட்டணத்தை ஏற்றுக்கொண்டு அன்றிலிருந்து இன்று வரை தவறாமல் வருடாவருடம் செலுத்திவருகிறார். பிரதமர் மோடியால் நல்ல பள்ளியில் கல்வி பயின்று வரும் தான், அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க ஆசைப்படுவதாக ரக்‌ஷிதா தெரிவித்துள்ளார். மேலும் தன்னை போன்று கஷ்டப்படுவோருக்கு பிரதமர் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.