மனதில் வலியை ஏற்படுத்துகிறது – பிரதமர் மோடி உருக்கம்!

 

மனதில் வலியை ஏற்படுத்துகிறது – பிரதமர் மோடி உருக்கம்!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் செயல்பட்டு வரும் ஜாகிர் உசேன் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சப்ளை செய்ய டேங்கர் லாரி சென்றது. அந்த லாரியில் இருந்து சிலிண்டர்களுக்கு ஆக்சிஜன் மாற்றப்பட்ட போது, பைப் லீக் ஆனதால் வாயுக்கசிவு ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக நேர்ந்த இந்த விபத்தால் 30 நிமிடங்கள் ஆக்சிஜன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 22 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மனதில் வலியை ஏற்படுத்துகிறது – பிரதமர் மோடி உருக்கம்!

இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்த அம்மாநில சுகாதாரத்துறை, வாயுக்கசிவு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் மற்ற நோயாளிகள் நலமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயுக்கசிவால் 22 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் வேதனையளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மனதில் வலியை ஏற்படுத்துகிறது – பிரதமர் மோடி உருக்கம்!

அந்த பதிவில், ஆக்சிஜன் வாயுக்கசிவால் நாசிக்கில் 22 நோயாளிகள் இறந்த சம்பவம் மனதில் வலியை ஏற்படுத்துகிறது. இச்சம்பவம் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.