Home இந்தியா மன் கி பாத் நிகழ்ச்சியில்.. குன்னூர் பெண்மணியை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி!

மன் கி பாத் நிகழ்ச்சியில்.. குன்னூர் பெண்மணியை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி!

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவது வழக்கம். அதன் படி, இம்மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று 79ஆவது மன் கி பாத் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களின் பெருமைகளை எடுத்துரைத்து அவர்களுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். ஒலிம்பிக்கில் மூவர்ணக் கொடியை ஏந்தி இந்திய வீரர்கள் வலம் வந்தது பரவச உணர்வை ஏற்படுத்தியது என்று ஒலிம்பிக் பற்றி பேசினார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில்.. குன்னூர் பெண்மணியை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி!
மன் கி பாத் நிகழ்ச்சியில்.. குன்னூர் பெண்மணியை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி!

இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 12-ஆம் தேதி மகாத்மா காந்தி சபர்மதி ஆசிரமத்தில் அம்ரித் மஹோத்சவ் விழா நடைபெறவுள்ளதாக அறிவித்தார். இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் அம்ரித் மஹோத்சவ் விழா நடைபெறுகிறது. அதில் அரசியல் இல்லை. கட்சி பேதமின்றி அனைவரும் கொண்டாடும் தேசிய விழா. வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டம் நடத்தியதைப்போல இந்தியாவை ஒருங்கிணைத்து இந்த விழாவை கொண்டாடுவோம் என்றார்.’

மன் கி பாத் நிகழ்ச்சியில்.. குன்னூர் பெண்மணியை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி!

தொடர்ந்து பேசிய மோடி, சென்னை ஐஐடி மாணவர்கள் 3டி முறையில் அச்சிட்டு வீடு ஒன்றை அமைத்ததை குறிப்பிட்டு, லைட் ஹவுஸ் எனும் தொழில்நுட்பம் மூலம் குறைந்த செலவில் மிக விரைவாக கட்டடம் கட்டப்படுகிறது. பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கலாச்சாரங்களை புரிந்து நடப்பதில் மகத்துவம் அடங்கியுள்ளது என்று பேசினார். மேலும், மன் கி பாத் உரையில் குன்னூர் பெண்மணியை பாராட்டிப் பேசினார். குன்னூரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்துவது பாராட்டுக்குரியது, மலைப்பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு இதன் மூலம் உதவி கிடைக்கிறது என்று புகழ்ந்தார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில்.. குன்னூர் பெண்மணியை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஆல்-ரவுண்டராக அசத்திய மேக்ஸ்வெல், ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஹர்ஷல் படேல்! பெங்களூரு அணி அசத்தல் வெற்றி

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 39-வது லீக் ஆட்டமானது துபாய் சர்வதேச மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும்மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்றது.

”எடப்பாடியை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும்”

எடப்பாடி பழனிச்சாமியை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாஜக, அதிமுக தனித்து போட்டி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டணி கட்சிகளான பாஜகவும் அதிமுகவும் தனித்து போட்டியிடுகிறது. பிரச்சார வாகனத்தில் கூட்டணி கட்சியின் கொடிகள் இல்லாமலும், பொதுமக்களிடம் பரப்புரை நோட்டீஸ் கொடுக்காமலும் பாஜகவினர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்

சக அதிகாரியால் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் விமானப்படை அதிகாரி

கோவையில் இந்திய விமான படை பயிற்சி கல்லூரியில் பெண் விமானப்படை அதிகாரியை வன்கொடுமை செய்த சக அதிகாரி கைது செய்யப்பட்டார்.
TopTamilNews