செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால், பிளஸ் 2 மாணவி தற்கொலை!

 

செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால், பிளஸ் 2 மாணவி தற்கொலை!

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் இடையன்விளை சவரித்த நாடார்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். கூலி தொழிலாளி. இவரது மகள் ராதிகா (17). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். பொதுமுடக்கம் காரணமாக செல்போனில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வந்த ராதிகா, வகுப்பு இல்லாத நேரங்களிலும் செல்போனில் மூழ்கி கிடந்ததாக கூறப்படுகிறது.

செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால், பிளஸ் 2 மாணவி தற்கொலை!

இதனால் அவரை பெற்றோர் கண்டித்து உள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராதிகா நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த நாசரேத் போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.