+2 பொதுத்தேர்வு முடிவுகள்: மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விவரம் இணையத்தில் வெளியீடு!

 

+2 பொதுத்தேர்வு முடிவுகள்:  மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விவரம் இணையத்தில் வெளியீடு!

கொரோனா வைரஸ் காரணமாக  ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் கடந்த 24 ஆம் தேதி நடந்த வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் ஆகிய பாடத்தேர்வுகளில் கலந்து கொள்ளாத 32 ஆயிரம் மாணவர்கள், அந்த தேர்வை எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

+2 பொதுத்தேர்வு முடிவுகள்:  மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விவரம் இணையத்தில் வெளியீடு!

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.மாணவர்களின் கைபேசி எண்ணிற்கு  மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.

+2 பொதுத்தேர்வு முடிவுகள்:  மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விவரம் இணையத்தில் வெளியீடு!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 8.16 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.  அந்த வகையில்  தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.80 சதவீத மாணவிகள், 89.41 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.3 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. +2ஆம் வகுப்பு தேர்வு முடிவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.  திருப்பூர் மாவட்டத்தில் 97.12 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில்12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகின. தேர்வு முடிவுகள் tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டன.

மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளும் தேதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி, வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் விடைத்தாள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.