‘தயவுசெய்து மாஸ்க் போடுங்க’ : சிவகார்த்திகேயனின் விழிப்புணர்வு வீடியோ!

 

‘தயவுசெய்து மாஸ்க் போடுங்க’ : சிவகார்த்திகேயனின் விழிப்புணர்வு வீடியோ!

கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

‘தயவுசெய்து மாஸ்க் போடுங்க’ : சிவகார்த்திகேயனின் விழிப்புணர்வு வீடியோ!

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோவில், “கொரோனா பெருஞ்தொற்று வேகமாக பரவி நமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் நிறைய உயிர் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதை தடுப்பதற்காக நமது தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறார்கள்.

‘தயவுசெய்து மாஸ்க் போடுங்க’ : சிவகார்த்திகேயனின் விழிப்புணர்வு வீடியோ!

நமக்கு பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில் சிலரை உங்களிடம் இந்த வீடியோ மூலம் பகிர்ந்து கொண்டுள்ளேன். இதில் மிக முக்கியமானது தடுப்பூசியை செலுத்தி கொள்வது. நான் என்னுடைய முதல் டோசை செலுத்தி கொண்டேன். மிக மிக அவசியம் இருந்தால் மட்டுமே வெளியே வரவேண்டும். அப்படி வரும்போது சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும். கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் .அதை விட மிக முக்கியம் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்து கொள்ளுங்கள் . இது எல்லாம் உங்களுக்கு தெரிந்ததுதான்’ இவற்றை கடைப்பிடிப்பது நமது கடமை.

அதுமட்டுமல்லாமல் கொரோனா குறித்து எந்த பயமும் இல்லாமல் நமக்காக போராடிக் கொண்டிருக்கிற முன் களப்பணியாளர்களுக்கு நாம் செய்யும் மரியாதையும் அதுதான். எல்லாருமே நினைத்தால் நிச்சயம் இதிலிருந்து மீண்டு வர முடியும். ஒன்றிணைவோம் கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். நம்மையும் காப்போம் ; நாட்டையும் காப்போம். கொரோனவை வெல்வோம்; மக்களை காப்போம்” என்று கூறியுள்ளார்.