பிளாஸ்மா வங்கி – சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திறப்பு

 

பிளாஸ்மா வங்கி – சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திறப்பு

கொரோனா நாட்டையே முடக்கிப் போட்டுவிட்டது. கடந்த மார்ச் முதல் இப்போது வரை நாடு முழுவதும் லாக்டெளன் அறிவிக்கப்பட்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்று (ஜூலை 22) தமிழ்நாட்டில் புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 5,849 பேர். என்றுமில்லாத அளவு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

பிளாஸ்மா வங்கி – சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திறப்பு

கொரோனா நோய்க்கு இதுவரை எங்கும் மருந்து கண்டறியப் பட வில்லை. பல நாடுகளின் விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சி செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில் பிளாஸ்மா சிகிச்சை நோயாளிகள் விரைவில் குணமடைய உதவுதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் 20 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 18 பேர் முழுமையாக குணம் அடைந்துவிட்டனர்.

பிளாஸ்மா சிகிச்சை என்பது கொரோனா நோய் தாக்கி, அதிலிருந்து பூரணமாக குணம் அடைந்தவரின் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மாவை எடுத்து நோயால் பாதிக்கப்பட்டிருப்பவருக்குச் செலுத்துவதாகும். நோய் தாக்கியவர் குணமாகி 14 நாள்கள் கழித்து தங்கள் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவைத் தானமாகக் கொடுக்க முடியும்.

பிளாஸ்மா வங்கி – சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திறப்பு

இன்று சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

18 வயது முதல் 65 வயதுள்ளவர் வரை பிளாஸ்மா தானம் கொடுக்க இயலும். இப்போதைய வசதிப்படி ஒரே 7 பேருக்கு பிளாஸ்மாவைப் பெற இயலும். இந்த வசதி தமிழ்நாட்டின் மற்ற மாநகரங்களிலும் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.