‘காங்கிரஸ் வேட்பாளர்’ கொரோனாவால் மரணம்!

 

‘காங்கிரஸ் வேட்பாளர்’ கொரோனாவால் மரணம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை லட்சக் கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கும் நிலையில் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்களையும் இந்த கொரோனா விட்டு வைக்கவில்லை. அரசியல் கட்சிகளை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அண்மையில் மகாராஷ்டிரா மாநிலம் டெக்லூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவுசாஹேப் கொரோனாவால் உயிரிழந்தார்.

‘காங்கிரஸ் வேட்பாளர்’ கொரோனாவால் மரணம்!

இந்த நிலையில், ஒடிசா மாநிலம் பிபிலி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அஜித் மங்கராஜ் (53) கொரோனாவால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக பரப்புரை மேற்கொண்டு வந்த அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியபட்டுள்ளது. இதனால், அவர் கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

‘காங்கிரஸ் வேட்பாளர்’ கொரோனாவால் மரணம்!

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வேட்பாளர் உயிரிழந்ததால் வரும் 17ம் தேதி நடக்கவிருந்த இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகவும் வாக்குப்பதிவு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அம்மாநில தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். மங்கராஜ் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.