பல எம்.எல்.ஏ.க்களுக்கு 60 வயது தாண்டிட்டு.. இப்பம் நடத்தினால் ஆபத்து… கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடர் ரத்து

பல எம்.எல்.ஏ.க்களுக்கு 60 வயது தாண்டிட்டு.. இப்பம் நடத்தினால் ஆபத்து… கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடர் ரத்து

கேரளாவில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் வரும் திங்கட்கிழமையன்று தொடங்க இருந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை ரத்து செய்ய கேரள அமைச்சரவை ரத்து செய்துள்ளது. நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் மாநில அமைச்சரவை நடைபெற்றது. அந்த கூட்டத்தில்தான் சட்டப்பேரவை கூட்டத்தொடரை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:

பல எம்.எல்.ஏ.க்களுக்கு 60 வயது தாண்டிட்டு.. இப்பம் நடத்தினால் ஆபத்து… கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடர் ரத்து

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதியிலிருந்து திருவனந்தபுரம் வர வேண்டும். பல எம்.எல்.ஏ.க்கள் கட்டுபடுத்துதல் மண்டலத்திலிருந்து வர வேண்டும் மற்றும் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் வயது அறுபதை தாண்டி விட்டது. அரசு சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்தினால், எந்தவொரு உறுப்பினரும் பாதிக்கப்பட்டால், நிலைமை என்னவாக இருக்கும்?. தற்போதைய சூழ்நிலையில், அனைத்து கோவிட்-19 விதிமுறைகளையும் பின்பற்றி சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்துவது மிகவும் கடினம்.

பல எம்.எல்.ஏ.க்களுக்கு 60 வயது தாண்டிட்டு.. இப்பம் நடத்தினால் ஆபத்து… கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடர் ரத்து

மக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதுதான் அரசின் முதன்மை கவலை. அதனால்தான் சட்டப்பேரவை கூட்டத்தொடரை ரத்து செய்யும்படி கவர்னருக்கு பரிந்துரை செய்ய மாநில அமைச்சரவை முடிவு எடுத்தது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில்தான் 2020-21ம் நிதியாண்டுக்கான நிதி மசோதா தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. கேரளாவில் முழு லாக்டவுன் அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்க சிறப்பு அமைச்சரவை கூட்டம் வரும் திங்கட்கிழமையன்று நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கேரள சட்டப்பேரவையில் ஸ்வப்னா சுரேஷ் விவகாரத்தை (தங்க கடத்தல்) கிளப்ப தயாராக இருந்த எதிர்க்கட்சியினருக்கு கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டு இருப்பது பெரும் ஏமாற்றமாக இருக்கும் என தெரிகிறது.