கர்ப்பிணி யானை கொலை… பொங்கிய மேனகா காந்தி…. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர்- கேரள முதல்வர் உறுதி

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் வனப்பகுதியில் நேற்று சுற்றி திரிந்த கர்ப்பிணி யானை ஒன்று உணவுக்காக அருகில் உள்ள ஊருக்குள் வந்துள்ளது. அங்கு மனிதர்கள் கொடுத்த உணவை சாப்பிட்டது. அப்போது சதிக்காரர்கள் சிலர் அன்னாசி பழத்தில் வெடிமருந்தை வைத்து அந்த யானைக்கு சாப்பிட கொடுத்துள்ளனர். யானை அதை சாப்பிட முயன்ற போது பழத்தில் இருந்த வெடிமருந்து வாயிலேயே வெடித்துள்ளது. இதில் காயம் அடைந்த யானை அங்கிருந்து மீண்டும் காட்டுக்குள் ஒடியது. பின் ஆற்றில் இறங்கி நின்றது. அந்த யானையை மீட்க வனத்துறையினர் முயற்சி செய்தனர். ஆனால் யானை அதற்குள் பரிதாபமாக பலியானது.

மேனகா காந்தி

இந்த சம்பவம் கேரளாவை மட்டுமல்ல நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பா.ஜ.க. தலைவரும், விலங்கு நல ஆர்வலருமான மேனகா காந்தி டிவிட்டரில், மலப்புரம் கடுமையான குற்றச் செயல்களுக்காக குறிப்பாக விலங்குகள் தொடர்பாக அறியப்படுகிறது. ஒரு வேட்டைக்காரர் அல்லத கொலையாளி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அவர்கள் அதை செய்கிறார்கள். நான் அழைப்பு/மின்னஞ்சல் மட்டுமே பரிந்துரைக்க முடியும் மற்றும் நடவடிக்கை கேட்க முடியும் என பதிவு செய்து இருந்தார்.

முதல்வர் பினராயி விஜயன்

யானையை கொன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் இது குறித்து கூறுகையில், யானை பலியானது தொடர்பாக வனத்துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார். அம்மாநில வனத்துறை அமைச்சர் கே ராஜூ கூறுகையில், கர்ப்பிணி யானை கொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Most Popular

நான் இன்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன்.. முடிவு வந்தது- தமிழிசை ட்வீட்

தெலங்கானா மாநிலத்தில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமாகி வீட்டுக்கு வந்து விட்டனர். தெலங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 300 க்கும் அதிகமானோர்...

கல்லூரி தேர்வு விஷயத்தில் மாநில அரசுகளுக்கு மிரட்டல் விடுப்பதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்- ராமதாஸ்

கல்லூரி தேர்வு விஷயத்தில் மாநில அரசுகளுக்கு மிரட்டல் விடுப்பதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனாவால் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி...

கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை ஆட்டோவில் அசால்ட்டாக எடுத்துச் சென்ற கொடுமை

தெலுங்கானாவில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஆட்டோவில் ஏற்றிச் சொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் 50 வயது நபருடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் ஜூன் 27 ஆம்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் வழக்கமான பூஜைகள் நடந்து வந்தன. கடந்த ஜூன் மாதம்...
Open

ttn

Close