தேவேந்திர குல வேளாளர் பெயர் பரிந்துரைக்கு எதிராக, பிள்ளைமார் சமூகத்தினர் சாலை மறியல்

தேவேந்திர குல வேளாளர் பெயர் பரிந்துரைக்கு எதிராக, பிள்ளைமார் சமூகத்தினர் சாலை மறியல்

தேனி

தேவேந்திர குல வேளாளர் பெயர் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனியில் பிள்ளைமார் சமூகத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டியலினத்தை சேர்ந்த 7 உட்பிரிவினரை தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனி மாவட்டம் கோடங்கிபட்டி பகுதியில் பிள்ளைமார் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தேவேந்திர குல வேளாளர் பெயர் பரிந்துரைக்கு எதிராக, பிள்ளைமார் சமூகத்தினர் சாலை மறியல்

அந்த அமைப்பின் மாநில நிர்வாகிகள் பந்தல் ராஜா, அன்னலட்சுமி ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மாற்று சமூகத்தினருக்கு வேளாளர் என்ற பெயரை வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

தேவேந்திர குல வேளாளர் பெயர் பரிந்துரைக்கு எதிராக, பிள்ளைமார் சமூகத்தினர் சாலை மறியல்

சாலை மறியல் காரணமாக தேனி – போடி சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்குசென்ற பழனிசெட்டிப்பட்டி போலீசார், போராட்டக்கார்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர்.