ஃபைசர் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்த இன்னொரு நாடு

 

ஃபைசர் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்த இன்னொரு நாடு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 62 லட்சத்து 30 ஆயிரத்து 912 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 58 லட்சத்து 12 ஆயிரத்து 406 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 15 லட்சத்து 24 ஆயிரத்து 457 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,88,94,049 பேர். சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 2 கோடியை நெருங்குகிறது.

ஃபைசர் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்த இன்னொரு நாடு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு எனும் நிலைக்கு உலக நாடுகள் வந்துவிட்டன. ரஷ்யாவே உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தது. ஆனால், இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அடுத்த வாரத்தில் ரஷ்யாவின் முன்கள வீரர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பு மருந்தை அளிக்க முடிவெடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை பொதுமக்களுக்கு அளிக்க அனுமதி அளித்தது பிரிட்டன். ஏனெனில், பிரிட்டன் நாட்டில் கொரோனா பரவல் உட்சபட்சமாக இருக்கிறது. அதனால், உடனடியாக இந்த அனுமதியை அளித்துள்ளது.

ஃபைசர் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்த இன்னொரு நாடு

இந்நிலையில் ஃபைசர் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு அளிக்க இன்னொரு நாடும் அனுமதி கொடுத்திருக்கிறது. அது பஹ்ரைன் நாடே. ஃபைசர் நிறுவத்தின் தடுப்பூசி இன்னும் சில நாட்களில் பஹ்ரைன் நாட்டில் நடைமுறைக்கு வர விருக்கிறது.

பஹ்ரைன் நாட்டில் கொரோனா மொத்த பாதிப்பு 87,600. இவர்களில் 85,710 பேர் குணமடைந்து விட்டனர். 341 பேர் இறந்துவிட்டனர்.