பாஜக ஆதரவாளர் வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு!

 

பாஜக ஆதரவாளர் வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே நள்ளிரவில் பாஜக ஆதரவாளர் வீட்டின் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டம் நித்திரவிளை அடுத்த பூத்துறையை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (51). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண்கள் உள்ளனர். வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த கிருஷ்ண குமார், கடந்த ஓராண்டு காலமாக காஞ்சாம்புரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பாஜக ஆதரவாளரான இவர், குமரி நாடாளுமன்ற இடைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

பாஜக ஆதரவாளர் வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு!

இந்த நிலையில், ஞாயிற்று கிழமை நள்ளிரவு கிருஷ்ணகுமார், குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்து உள்ளார். அப்போது, திடீரென வீட்டின் வெளியே வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனால் வெளியே சென்று பார்த்தபோது, வீட்டின் முன்பு மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து, நள்ளிரவில் அங்கு திரண்ட பொதுமக்கள், பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

தொடர்ந்து, இதுகுறித்து கிருஷ்ணகுமார் அளித்த புகாரின் பேரில், நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேர்தல் முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.