கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு!

கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு!

கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் உள்ளிட்டவர்களை ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் மனு செய்துள்ளனர்.

கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு!
கந்தசஷ்டி கவசம் பற்றி அவதூறான வீடியோவை வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகிகள் செந்தில்வாசன், சுரேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கறுப்பர் கூட்டம் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பதிவேற்றம் செய்த வீடியோக்கள் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு!
இந்த நிலையில் கந்த சஷ்டி கவசத்தைப் பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்டது ஏன் என்று விசாரிக்க இவர்கள் அனைவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை பெருநகர சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஐந்து நாள் போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.