டி.எம்.எஸ் மெட்ரோவுக்கு கலைஞர் பெயர் வைக்க கோரிய மனு தள்ளுபடி! – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

டி.எம்.எஸ் மெட்ரோவுக்கு கலைஞர் பெயர் வைக்க கோரிய மனு தள்ளுபடி! – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை மெட்ரோ 2006-11 தி.மு.க ஆட்சியில் உருவாக்கப்பட்டாலும்

டி.எம்.எஸ் மெட்ரோவுக்கு கலைஞர் பெயர் வைக்க கோரிய மனு தள்ளுபடி! – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

செயல்பாட்டுக்கு வந்தது அ.தி.மு.க ஆட்சியில்தான். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தான் சென்னை மெட்ரோ சேவையை இயக்கிவைத்தார். அதன்பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் வண்ணாரப்பேட்டை வரையிலான சேவையை நீட்டிக்கச் செய்தார்.

டி.எம்.எஸ் மெட்ரோவுக்கு கலைஞர் பெயர் வைக்க கோரிய மனு தள்ளுபடி! – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சமீபத்தில் சென்னை மெட்ரோவின் ஆலந்தூர் மற்றும் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் பெயரை சூட்டி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. மெட்ரோ திட்டத்தைக் கொண்டு வந்த கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என்று தி.மு.க தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.

டி.எம்.எஸ் மெட்ரோவுக்கு கலைஞர் பெயர் வைக்க கோரிய மனு தள்ளுபடி! – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயரை சூட்ட உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கலைஞர் தமிழ் பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் “டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கலைஞர் பெயர் சூட்டுவது பற்றி தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.