புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு!

 

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு!

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு!

10 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டதை போல என்ஆர் காங்கிரஸ் – பாஜக – அதிமுக கூட்டணி நீடிக்கிறது. அதேபோல் காங்கிரஸ் – திமுக – இந்திய கம்யூனிஸ்ட் – விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. புதுச்சேரியில் 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துக்கான உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நகராட்சிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதியும், 2ஆம் கட்டமாக புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கு அக்டோபர் 25 ஆம் தேதியும், 3ம் கட்டமாக கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு அக்டோபர் 28 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறுகிறது.

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு!

முதல்கட்ட வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 7 ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11 ஆம் தேதியும், மூன்றாம்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதியும் நிறைவடைகிறது.

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு!

இந்நிலையில் புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் நகராட்சி சேர்மேன் பதவிக்கு போட்டியிட ரூ10,000, முனிசிபல் கவுன்சிலர் பதவிக்கு ரூ5,000, கொம்யூன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு ரூ3,000 மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ரூ2,000 என குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்ப மனுவை 27.9.2021 முதல் 30.9.2021 வரை சமர்ப்பிக்கலாம்என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.