அரண்மனை கண்மாய்க்கு நீர் வழங்கக் கோரி, துணை முதல்வரிடம் மனு

 

அரண்மனை கண்மாய்க்கு நீர் வழங்கக் கோரி, துணை முதல்வரிடம் மனு

தேனி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள அரண்மனை கண்மாய்க்கு வைகை ஆற்று நீர் வழங்கக் கோரி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. ஆண்டிபட்டியில் இன்று நடந்த கூட்டுக்குடிநீர் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம், தேக்கம்பட்டி கிராம மக்கள் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரலேகா ஜெயகொடி மற்றும் துணை தலைவர் அருணா ஆகியோர் கோரிக்கை மனுவை வழங்கினர்.

அரண்மனை கண்மாய்க்கு நீர் வழங்கக் கோரி, துணை முதல்வரிடம் மனு

அந்த மனுவில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை கண்மாயால் சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளும், 500-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளுக்கு நீர் சுரப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டடு இருந்தது. மேலும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும், ஏராளமான கால்நடைகளும் பயன்பெறும் இந்த கண்மாயை முறையாக தூர்வாரி, துரைச்சாமிபுரம் வைகை இணைப்பு கால்வாயில் இருந்து வரும் தண்ணீரை வழங்குமாறு, அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது. மனுவை பெற்றுகொண்ட துணை முதலமைச்சர் கோரிக்கை குறித்து ஆய்வுசெய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.