இலங்கையில் 20 வது சட்டத் திருத்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு

 

இலங்கையில் 20 வது சட்டத் திருத்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு

இலங்கையில் நடந்த தேர்தலில் வென்று, மகிந்த ராஜபக்‌ஷே மீண்டும் பிரதமரானார். அவரின் சகோதரர் கோத்தபய ராஜபக்‌ஷே அதிபர் என்பது தெரிந்த விஷயமே. ராஜபக்‌ஷே குடும்பத்தின் பலருக்கும் அரசியல் அதிகாரப் பொறுப்புகள் அளிக்கப்பட்டதாக புகாரும் எழுந்தது.

இலங்கையின் 19- வது சட்டத்திருத்ததை நீக்கி, 20-வது சட்டத் திருத்தம் செய்ய பாராளுமன்றத்தில் ராஜபக்‌ஷே கட்சி முயற்சி மேற்கொண்டது. பெரும்பான்மை இருப்பதால் எளிதாக இது சாத்தியம்தான் என்று பேசப்படுகிறது.

இலங்கையில் 20 வது சட்டத் திருத்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு

20-வது சட்டத்த்திருத்தம் அதிபருக்கு வானளவிய அதிகாரத்தை அளிக்கிறது என்று கூறப்படுகிறது.  நாடாளுமன்றம் அமைக்கப்பட்ட ஓர் ஆண்டுக்குப் பிறகு அதை அதிபர் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் கலைக்கலாம் என்றும்,  அமைச்சர் பதவியை நீக்கும் அதிகாரமும் அதிபருக்கு உண்டு போன்ற பல அதிகாரங்கள் அதிபருக்கு அளிக்கிறது இந்தச் சட்டத்திருத்தம்.

இந்தச் சட்டத்திருத்ததிற்கு இலங்கை எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றன. இந்நிலையில், 20 சட்டத்திருத்ததிற்கு எதிராக 18 மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் 20 வது சட்டத் திருத்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கடும் விவாதம் தொடங்கியுள்ளது. தற்போது எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுக்கள், இம்மாதம் (செப்டம்பர்) 29-ம் தேதி விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.