நளினியை புழல் சிறைக்கு மாற்றக்கோரி வழக்கு; என்ன காரணம்?!

 

நளினியை புழல் சிறைக்கு மாற்றக்கோரி வழக்கு; என்ன காரணம்?!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி பேரறிவாளன், ராபர்ட் பயஸ், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், அவரது கணவன் முருகன் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் தங்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுவித்து வருகின்றனர். குறிப்பாக கணவன் மனைவியான நளினியும் முருகனும் அடிக்கடி உண்ணா விரதம் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நளினியை புழல் சிறைக்கு மாற்றக்கோரி வழக்கு; என்ன காரணம்?!

அண்மையில் நளினியை பேசவும், பார்க்கவும் அனுமதிக்கோரி சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருந்தார். இதனிடையே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி நளினி தற்கொலை முயற்சி செய்தார். சக கைதியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலர் ஒருவர் தலையிட்டதால் அவர் தற்கொலை முயற்சி செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு சிறையில் பரபரப்பு சம்பவங்களை இரண்டு பேரும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வேலூர் சிறையில் இருக்கும் நளினியை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என நளினியின் தாயார் பத்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். 80 வயதான அவர், வேலூருக்கு சென்று நளினியை பார்க்க சிரமமாக இருப்பதால் சென்னைக்கு மாற்ற வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இன்று அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, நளினியை புழல் சிறைக்கு மாற்றுவது குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.