வானதி சீனிவாசன் வெற்றியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளர் மனு – தேர்தல் ஆணையம் ஏற்பு!

 

வானதி சீனிவாசன் வெற்றியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளர் மனு – தேர்தல் ஆணையம் ஏற்பு!

கோவை

கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதை எதிர்த்து, சுயேட்சை வேட்பாளர் அளித்த மனுவை, தேர்தல் ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2ஆம் தேதி எண்ணப்பட்டது. இதில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், வானதி சீனிவாசன் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில், கமல்ஹாசனை வீழ்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வானதி சீனிவாசன் வெற்றியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளர் மனு – தேர்தல் ஆணையம் ஏற்பு!

இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி நடைபெற்றுள்ளதாகவும், எனவே மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரியும் சுயேட்டையாக போட்டியிட்ட ராகுல் காந்தி என்பவர், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில், சுயேட்சை வேட்பாளர் ராகுல்காந்தி இன்று தேர்தல் ஆணையத்தின் குறை தீர்ப்பு எண்ணில், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் வெற்றியில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் மனு அளித்தார். இந்த மனுவுக்கு பதிலளித்து தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பியுள்ள பதிவில், ராகுல்காந்தியின் புகார் மனு ஏற்கப்பட்டதாகவும், மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.