தாய்லாந்தில் சுற்றுலாவுக்கு அனுமதி- ஆனால் ஒரு கண்டிஷன்!

 

தாய்லாந்தில் சுற்றுலாவுக்கு அனுமதி- ஆனால் ஒரு கண்டிஷன்!

கொரோனாவில் முன்னெச்சரிக்கையாக இருந்த நாடுகளில் தாய்லாந்தும் ஒன்று. அங்கு மற்ற நாடுகளின் பாதிப்புகளோடு ஒப்பிடுகையில் சற்று குறைவே.

இன்றைய தேதி வரை தாய்லாந்தில் கொரோனாவின் மொத்த பாதிப்பு 3,709 பேர். இவர்களில் 3,495 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துவிட்டனர். 59 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தாய்லாந்தில் சுற்றுலாவுக்கு அனுமதி- ஆனால் ஒரு கண்டிஷன்!

இதனால், தாய்லாந்தில் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டது. தாய்லாந்தின் வருமானம் ஈட்டுவதில் பெரும்பங்கு வகிப்பது சுற்றுலாவே.

மார்ச் மாதம் 22-ம் தேதி ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதுவே தாய்லாந்தில் ஒரே நாளில் அதிகளவில் பதிய செய்யப்பட்ட புதிய நோய்த் தொற்று எண்ணிக்கை.

மே மாதம் தொடங்கி கணிசமாக கொரோனா நோய்த் தொற்று குறைந்து கொண்டே வந்தது. செப்டம்பர் மாத இறுதியில் சற்று அதிகரித்தது. ஆனாலும், இப்போதும் கட்டுக்குள்தான் அங்கு கொரோனா நோய்த் தொற்று இருக்கிறது.

தாய்லாந்தில் சுற்றுலாவுக்கு அனுமதி- ஆனால் ஒரு கண்டிஷன்!

இறப்பு எண்ணிக்கை பொறுத்தவறை ஜூன் 2-ம் தேதிக்குப் பிறகு அடுத்த மரணம் செப்டம்பர் 19-ம் தேதிதான் நடந்தது.

நேற்றைய கணக்கின்படி ஆக்டிவ் கேஸஸ் 150 ஆக உள்ளது தாய்லாந்தில். இதனால் தற்போது தாய்லாந்தில் சுற்றுலாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுற்றுலாவுக்கு வரும் பயணிகள் கட்டிப்பாக 14 நாள் ஹோட்டலுக்குள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கண்டிஷனை விதிக்கிறது தாய்லாந்து அரசு.