5 மாதங்களுக்குப் பிறகு ஈரோடு வ .உ .சி விளையாட்டு மைதானத்தில் பயிற்சிக்கு அனுமதி!

 

5 மாதங்களுக்குப் பிறகு ஈரோடு வ .உ .சி விளையாட்டு மைதானத்தில் பயிற்சிக்கு அனுமதி!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது செப்டம்பர் மாதம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும் பல்வேறு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் தற்போது படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி முதல் வ. உ .சி விளையாட்டு மைதானம் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பயிற்சி பெற தடைவிதிக்கப்பட்டிருந்தது.

5 மாதங்களுக்குப் பிறகு ஈரோடு வ .உ .சி விளையாட்டு மைதானத்தில் பயிற்சிக்கு அனுமதி!

வ .உ. சி விளையாட்டு மைதானத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் வீரர்-வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். கால்பந்து , வாலிபால் , பேஸ்கட்பால் தடகளம் மேலும் உள் விளையாட்டு அரங்கில் உள்ள இறகுப்பந்து மைதானம் போன்றவற்றில் மாணவ , மாணவிகள் பயிற்சி பெற்று வந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி முதல் பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று முதல் மீண்டும் பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்த பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. அதன்படி இன்று பயிற்சிக்கு வந்தவர்களுக்கு தையல் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, உடல் வெப்பநிலையை கண்டறியும் வகையில் தெர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே வீரர் வீராங்கனைகள் பயிற்சிக்கு மைதானத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஒரே நேரத்தில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது அதுவும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

5 மாதங்களுக்குப் பிறகு ஈரோடு வ .உ .சி விளையாட்டு மைதானத்தில் பயிற்சிக்கு அனுமதி!

இதுகுறித்து நம்மிடம் பேசிய மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ் குமார், ‘’கொரோனா பரவல் காரணமாக மார்ச், 23 முதல் ஈரோடு வ.உ.சி., பூங்கா விளையாட்டரங்கம் அடைக்கப் பட்டது. தற்போது அதில் தளர்வு அளிக்கப்பட்டு, சில கட்டுப் பாடுகளுடன், பயிற்சி எடுத்துக் கொள்ள இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
பயிற்சிக்கு வருவோர் கிருமி நாசினியில் கைகளை நனைத்துக் கொள்ளவேண்டும். உடல் வெப்ப பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். 100 பேர் மட்டுமே சமூக இடைவெளியில் பயிற்சி எடுக்க வேண்டும், பயிற்சியாளர்கள் தங்களுக்கு தேவையான தண்ணீரை தாங்களே பாட்டில்களில் கொண்டு வர வேண்டும்.

கூட்டம் அதிகமாக இருந்தால் பகுதியாக பிரித்து தனித்தனியாக பயிற்சி எடுக்க வேண்டும், தேவையற்ற குப்பைகளை கொண்டு வந்து மைதானத்தில் போடக் கூடாது, சிற்றுண்டி விற்கவோ, வாங்கவோ கூடாது, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதியில்லை. மேலும் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை’’ என்றார்.