நவம்பர் 16 ஆம் தேதி முதல் குடமுழுக்கு நடத்த அனுமதி : தமிழக அரசு

 

நவம்பர் 16 ஆம் தேதி  முதல் குடமுழுக்கு நடத்த அனுமதி : தமிழக அரசு

தமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி முதல் கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடர் காலம் என்பதால் தமிழகத்தில் கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன . அதேபோல் விமர்சையாக நடக்கும் திருவிழாக்களும் கோயில் வளாகத்திற்குள் பக்தர்கள் இன்றி நடந்து முடிந்தது.இருப்பினும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு குடமுழுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது.இருப்பினும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு குடமுழுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது.

நவம்பர் 16 ஆம் தேதி  முதல் குடமுழுக்கு நடத்த அனுமதி : தமிழக அரசு

இந்நிலையில் குடமுழுக்கு செய்ய அனுமதிக்கவேண்டும் என வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16ஆம் தேதி முதல் வழிமுறைகளை பின்பற்றி நூறு பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளும் வகையில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து குடமுழுக்கு விழாக்கள் நடத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.