கேரளாவிற்கு செல்ல அனுமதி: குமுளியில் கடைகள் திறப்பு!

 

கேரளாவிற்கு செல்ல அனுமதி: குமுளியில் கடைகள் திறப்பு!

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழக- கேரள எல்லைப்பகுதியான குமுளி மூடப்பட்டிருந்தது. படிப்படியாக அளிக்கப்பட்ட தளர்வுகளின் போது கேரள அரசு இந்த உத்தரவை திரும்பப்பெற்ற நிலையில் டோக்கன் பெறுதல், இபாஸ் சோதனை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அதிகமாக தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

கேரளாவிற்கு செல்ல அனுமதி: குமுளியில் கடைகள் திறப்பு!

அங்கு விவசாயமும் நடைபெற்று வருவதால் தமிழகத்தின் மதுரை, தேனி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இடுக்கிக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவ்வாறு செல்பவர்களை கேரள அரசு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலேயே அனுமதித்ததால் பெரும் சிரமம் ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல், கேரள எல்லையில் டோக்கன் பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சிக்கலும் நீடித்தது.

கேரளாவிற்கு செல்ல அனுமதி: குமுளியில் கடைகள் திறப்பு!

இந்த நிலையில், தற்போது கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் குமுளியில் இயங்கி வந்த சோதனைச் சாவடியை அகற்றுமாறு கேரள அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன் படி, சோதனை சாவடி அகற்றப்பட்டு இரு மாநிலங்களுக்கு இடையே வழக்கம் போல போக்குவரத்து சீராகியுள்ளது. மேலும், மக்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி சென்று வரும் நிலையில் குமுளியில் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.