சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்கலாம்!

 

சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்கலாம்!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது ரயில், பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடங்கின. பிறகு, அத்தியாவசிய பணியாளர்களுக்காக மட்டுமே சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டன. ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அத்தியாவசிய பணியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்கலாம்!

தற்போது பாதிப்பு குறைந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு இருப்பதால் நாளை முதல் பொதுமக்கள் சென்னை புறநகர் ரயிலில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பெண் பயணிகள் மற்றும் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அனைத்து நேரங்களிலும் பயணிக்கலாம் என்றும் ஆண் பயணிகள் non peak hoursல் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய, மாநில அரசு பணியாளர்கள் அனைவரும் உரிய அடையாள அட்டையுடன் பயணிக்க வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.