கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்ய 7 மையங்களுக்கு அனுமதி – மத்திய அரசு

 

கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்ய 7 மையங்களுக்கு அனுமதி – மத்திய அரசு

கொரோனா வைரஸ் தொற்றினால் பொருளாதாரத்தில் நிலைகுலைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. புதிய நோயாளிகள் அதிகரிப்பு, இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இவை இரண்டிலுமே உலகளவில் இந்தியாவே முதல் இடத்தில் உள்ளது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 71,39,553 பேரும், இந்தியாவில் 57,32,518 பேரும், பிரேசில் நாட்டில்  46,27,780 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்ய 7 மையங்களுக்கு அனுமதி – மத்திய அரசு

 நேற்று மட்டும் அமெரிக்காவில் 41,616 பேரும், பிரேசிலில் 32,442 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 89,688 பேராக அதிகரித்துள்ளனர். நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் அமெரிக்கா, பிரேசில் நாடுகளை விடவும் இந்தியாவில் அதிகம்.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே மக்களவையில் தெரிவித்ததில்,  ’சுகாதாரத்துறைக்கு மத்திய, மாநில அரசுகளின்  செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  1.2%-மாக உள்ளது. கொரோனா பரிசோதனைக்கு தமிழகத்தில் 176 பரிசோதனை மையங்கள் உட்பட நாடு முழுவதும் 1777 பரிசோதனை மையங்கள் உள்ளன.

கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்ய 7 மையங்களுக்கு அனுமதி – மத்திய அரசு

நாடு முழுவதும் 15,192 கொரோனா சிகிச்சை மருத்துவமனைகள் உள்ளன. இங்கு 15,38,541 தனிமை படுக்கைகள், 2,47,972 கூடுதல் படுக்கைகள், 66,638 ஐசியு படுக்கை வசதிகள், 33,024 வென்டிலேட்டர் வசதிகள் உள்ளன.

புனே, அகமதாபாத், ஐதராபாத், மும்பை ஆகிய இடங்களில் 7 மையங்களில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்வதற்கு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) உரிமம் வழங்கியுள்ளது.

கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்ய 7 மையங்களுக்கு அனுமதி – மத்திய அரசு

2025ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இந்தாண்டில் ஆகஸ்ட் வரை மொத்த 11,76,164 காச நோயாளிகள் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்தாண்டில் 13,58,415 பேர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் 163 நர்சிங் கல்லூரிகளும், 1833 தனியார் நர்சிங் கல்லூரிகளும் என மொத்தம் 1996 நர்சிங் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் 5 அரசு நர்சிங் கல்லூரிகளும், 183 தனியார் நர்சிங் கல்லூரிகளும் உள்ளன’ என்று கூறியுள்ளார்.