பேரறிவாளன் விடுதலை : ஜனாதிபதிக்கு பதில் ஆளுநரே முடிவு!

 

பேரறிவாளன்  விடுதலை : ஜனாதிபதிக்கு பதில் ஆளுநரே முடிவு!

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநர் 3 நாட்களில் முடிவெடுப்பார் என மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் தன்னை விடுவிக்குமாறு, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட பேரறிவாளன் தரப்பு வக்கீல், விடுதலை குறித்து ஜனாதிபதி முடிவெடுப்பதா? அல்லது கவர்னர் முடிவெடுப்பதா? என்ற குழப்பம் நீட்டிப்பதாகவும் மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலைப்பாட்டை மாற்றி வருவதாகவும் நன்னடத்தை பேரில் அவரை விடுவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

பேரறிவாளன்  விடுதலை : ஜனாதிபதிக்கு பதில் ஆளுநரே முடிவு!

இதையடுத்து மத்திய அரசு தரப்பில், பேரறிவாளன் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க முடியும். அவருக்கு மட்டும் தான் அதிகாரம் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். இந்த நிலையில், பேரறிவாளனின் விடுதலை தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பேரறிவாளன்  விடுதலை : ஜனாதிபதிக்கு பதில் ஆளுநரே முடிவு!

அப்போது, பேரறிவாளன் விடுதலையில் முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். தொடர்ந்து, பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவெடுப்பார் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.