அரசு நலத்திட்ட உதவிகள் கோரி, தேனி ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு

 

அரசு நலத்திட்ட உதவிகள் கோரி, தேனி ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு

தேனி

தேனி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழஙகிட வலியுறுத்தி, 10-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் கோரிக்கை மனுவை வழங்கினர். அந்த மனுவில், பிற மாவட்டங்களில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில் ஸ்மார்ட் போன் வழங்கப்படும் நிலலாயில், தேனி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கும் விரைந்து ஸ்மார்ட் போன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அரசு நலத்திட்ட உதவிகள் கோரி, தேனி ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு

பேட்டித்தேர்வுகள் மற்றும் இணைய வழி பயிற்சி பெறுவோருக்கு இது பேருதவியாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அதேபோன்று, காதுகேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன காதுகேட்கும் கருவிகள் வழங்கவும், கை மற்றும் கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் 3 சக்கர மோட்டார் வாகனங்கள் உள்ளிட்டவை கால தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.