“பாஜக கூட்டணியை மக்கள் நிராகரிப்பார்கள்”- முத்தரசன் பேட்டி

 

“பாஜக கூட்டணியை மக்கள் நிராகரிப்பார்கள்”- முத்தரசன் பேட்டி

தர்மபுரி

தமிழக சட்டமன்ற தேர்தலில், பாஜக கூட்டணியை மக்கள் நிராகரிப்பார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார், தர்மபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த கோரிக்கை மாநாட்டில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நலனை கருதி அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டுள்ளது வரவேற்க தக்கது என்றும், அவர் தொடர்ந்து பல படங்களை கொடுத்து சாதனைகளை புரிய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

“பாஜக கூட்டணியை மக்கள் நிராகரிப்பார்கள்”- முத்தரசன் பேட்டி

மேலும், பாஜக, பிற மாநிலங்களை போல பிரித்தாளும் சூழ்ச்சியை தமிழகத்திலும் கையாளும் திட்டத்துடன் செயல்பட்டு வருவதாகவும், வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள் என்றும் கூறினார். டெல்லியில் போராடும் விவசாயிகள் வலியுறுத்துவது வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதே, மத்திய அரசு இதுதொடர்பாக நல்ல முடிவு எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் கூறினார். மேலும், தன்னை விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதலமைச்சர் விவசாயிகளின் நலனுக்காகவும் விவசாயிகள் பக்கம் உள்ளவராகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்