இனிமேல் வீட்டில் மக்கள் தனிமை படுத்தப்பட மாட்டார்கள்- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

 

இனிமேல் வீட்டில் மக்கள் தனிமை படுத்தப்பட மாட்டார்கள்- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை எட்டியுள்ள நிலையில் சென்னையில் மட்டுமே 17,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருப்பினும் பாதிப்பு குறையவில்லை. இந்நிலையில் சென்னை பாதிப்பு குறித்து இன்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டிலேயே தனிமைபடுத்தி வருவதை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இனிமேல் வீட்டில் மக்கள் தனிமை படுத்தப்பட மாட்டார்கள்- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

அவர்களை வீட்டில் தனிமை படுத்தாமல் வீட்டில் ஒருவருக்கு கொரோனா இருந்தாலே குடும்பத்தில் உள்ள அனைவரையும் முகாமில் தனிமை படுத்த முடிவு செய்துள்ளதாகவும் கொரோனா அறிகுறி இல்லை என்றாலும் அவர்களை 10 முதல் 15 நாட்கள் தனிமைபடுத்தி வைத்திருந்து வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த நபர்கள் அரசின் முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.