குடிநீர் கேட்டு போராடிய மக்கள் – காவிரியில் தண்ணீர் இல்லை என வாக்குவாதம் செய்த நகராட்சி ஆணையர்

குடிநீர் கேட்டு போராடிய மக்கள் – காவிரியில் தண்ணீர் இல்லை என வாக்குவாதம் செய்த நகராட்சி ஆணையர்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்த பெண்களிடம், குடகு மலையிலேயே தண்ணீர் இல்லை என நகராட்சி ஆணையர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்குள்ள கோவிந்தராஜபுரம் மற்றும் காந்தி நகர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முறையாக காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

குடிநீர் கேட்டு போராடிய மக்கள் – காவிரியில் தண்ணீர் இல்லை என வாக்குவாதம் செய்த நகராட்சி ஆணையர்

இது தொடர்பாக, அந்த பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படும் நிலையில், கோவில்பட்டி சாலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே
காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த மணப்பாறை போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நகராட்சி அதிகாரிகள் வர வேண்டும் என கூறிய மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஆணையர் முரளி பொதுமக்களிடம் சமாதானம் பேசாமல் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

குடிநீர் கேட்டு போராடிய மக்கள் – காவிரியில் தண்ணீர் இல்லை என வாக்குவாதம் செய்த நகராட்சி ஆணையர்

காவிரி குடிநீர் எங்கிருந்து வருகிறது தெரியுமா? குடகு மலையில் இருந்து வர வேண்டும் என்று கூறியதாக நகராட்சி ஆணையர் வாக்குவாதம் செய்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பின்னர் , குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் தெரிவித்ததை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.