பண்டிகை காலத்தில் மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் -பிரதமர் மோடி

பண்டிகை காலத்தில் மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் -பிரதமர் மோடி

பிரதமர் மோடி ‘மான் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே இன்று உரையாற்றினார்.

பண்டிகை காலத்தில் மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் -பிரதமர் மோடி

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் மோடி மான் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் இன்று மான் கி பாத் நிகழ்ச்சியில் 68 வது எபிசோடில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பண்டிகை காலம் களைகட்ட தொடங்கி உள்ளதால் மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும். அதிக எச்சரிக்கையுடன் மக்கள் இந்த பண்டிகைகளை கொண்டாட வேண்டும். விநாயகர் சதுர்த்தியின் போது இயற்கை முறையில் செய்த விநாயகர் சிலைகளை பல இடங்களில் காண முடிந்தது. அமெரிக்கா, அரபு நாடுகளில் கூட ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது” என்றார்.

பண்டிகை காலத்தில் மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் -பிரதமர் மோடி

தொடர்ந்து பேசிய அவர், ” நெல் மற்றும் கோதுமை உள்ளிட்ட தானியங்கள் இந்த ஆண்டு அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்பட உள்ளது. செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு நடைபெற உள்ளது. ஊட்டச்சத்து தொடர்பாக போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக மக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது” என்றார்.