#Bansterlite ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷமிடும் மக்கள்!

 

#Bansterlite ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷமிடும் மக்கள்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இந்த இக்கட்டான சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த வேதாந்தா நிறுவனம், ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரியது. இதனை பரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது.

#Bansterlite ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷமிடும் மக்கள்!

அதன் படி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிய முதல்வர் பழனிசாமி, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிகமாக அனுமதி அளிக்கலாம் என அரசியல் கட்சிகள் தெரிவித்ததையடுத்து, 4 மாதத்துக்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று முதல்வர் அறிவித்தார். அதனிடிப்படையில், ஜூலை 31ம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

#Bansterlite ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷமிடும் மக்கள்!

கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய தூத்துக்குடி மக்கள் 13 பேர், சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை எவராலும் மறக்க முடியாது. அதன் சுவடு மறைவதற்குள், ஆலையை திறக்க அரசு அனுமதி அளித்திருப்பது பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை இன்று திறக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், Bansterlite என்ற கோஷங்களுடன் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.