இன்று முதல் அனைத்து மத வழிபாட்டுதலங்களும் மக்களுக்காக திறப்பு…. அதிகாலையிலேயே கோயில்களில் குவிந்த மக்கள்…

இன்று முதல் அனைத்து மத வழிபாட்டுதலங்களும் மக்களுக்காக திறப்பு…. அதிகாலையிலேயே கோயில்களில் குவிந்த மக்கள்…

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய லாக்டவுனை பல கட்டங்களாக மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. இதனால் நாடு முழுவதும் உள்ள கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. முதல் 2 கட்ட லாக்டவுனுக்கு பிறகு லாக்டவுன் விதிமுறைகளில் மத்திய அரசு சிறிது தளர்வுகளை அறிவித்தது. இருப்பினும் மத வழிப்பாட்டு தலங்களை திறக்க அனுமதி கொடுக்கவில்லை.

இன்று முதல் அனைத்து மத வழிபாட்டுதலங்களும் மக்களுக்காக திறப்பு…. அதிகாலையிலேயே கோயில்களில் குவிந்த மக்கள்…

இந்நிலையில் அண்மையில் ஜூன் 8ம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. மேலும், கோயில்களில் சமூக விலகல் கடைப்பிடித்தல், மாஸ்க் அணிதல், சிலைகள், புனித புத்தகங்களை தொடக்கூடாது என்பது உள்பட கோயில்களில் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது.

இன்று முதல் அனைத்து மத வழிபாட்டுதலங்களும் மக்களுக்காக திறப்பு…. அதிகாலையிலேயே கோயில்களில் குவிந்த மக்கள்…

மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன. டெல்லியில் உள் கால்கா ஜி கோயிலில் இன்று அதிகாலையிலேயே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் லக்னோவில் உள்ள ஈத்கா மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் மக்கள் சமூக விலகலை கடைப்பிடித்தனர் மற்றும் மாஸ்க் அணிந்து இருந்தனர்.