இ-பாஸ் இன்றி திண்டுக்கல் எல்லையில் நுழைய யாருக்கும் அனுமதி இல்லை- எஸ்.பி சக்திவேல்

 

இ-பாஸ் இன்றி திண்டுக்கல் எல்லையில் நுழைய யாருக்கும் அனுமதி இல்லை- எஸ்.பி சக்திவேல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மண்டலம் விட்டு மண்டலம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 8 மண்டலங்களில் சென்னை மட்டும் தனி மண்டலமாக ஆக்கப்பட்டுள்ளது. அதே போல திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் ஒரு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் இன்றி திண்டுக்கல் எல்லையில் நுழைய யாருக்கும் அனுமதி இல்லை- எஸ்.பி சக்திவேல்

மண்டலங்களுக்குள் செல்வதற்கு இ-பாஸ் தேவை இல்லை என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தும் தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மாவட்ட எல்லைக்குள் நுழைவதற்கு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவித்து வருகின்றன. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியும் இ-பாஸ் இல்லாமல் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படாது என்று அறிவித்தார். அந்த வகையில் தற்போது, இ-பாஸ் இன்றி திண்டுக்கல் எல்லையில் நுழைய யாருக்கும் அனுமதி இல்லை என்று எஸ்.பி சக்திவேல் தெரிவித்துள்ளார்.