கொரோனாவில் இருந்து நம்மை காக்க ஒரே வழி மாஸ்க் அணிதல் மட்டும் தான்: ராதாகிருஷ்ணன் பேட்டி

 

கொரோனாவில் இருந்து நம்மை காக்க ஒரே வழி மாஸ்க் அணிதல் மட்டும் தான்: ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,150 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 60 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 17 பேர் தனியார் மருத்துவமனையிலும், 43 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 68,254 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து நம்மை காக்க ஒரே வழி மாஸ்க் அணிதல் மட்டும் தான்: ராதாகிருஷ்ணன் பேட்டி

 

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கொரோனாவில் இருந்து தப்பிக்க ஓராண்டுக்கு மாஸ்க் அவசியம் என்றும் கொரோனாவுக்கு எதிரான ஆயுதம் மாஸ்க் மற்றும் கை கழுவுவது தான் என்றும் கூறினார். இந்த இக்கட்டான சூழலில் முதியவர்களை பட்டுப்பூச்சி போல பாதுகாக்க வேண்டும் என்று கூறிய அவர் சுனாமி, வெள்ளம், கனமழை போல கொரோனா பாதிப்பு இல்லை என்று கூறினார். மேலும், தென்மாவட்டங்களில் தேவைக்கு ஏற்ப கொரோனா பரிசோதனை அதிகமாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.