காரைக்கால்- அச்சம் அகன்று மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு அதிகரிப்பு!

 

காரைக்கால்- அச்சம் அகன்று மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு அதிகரிப்பு!

காரைக்காலில் கொரோனா அச்சமின்றி விழுப்புணர்வுடன் மக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்கின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் அதே வேளையில் புதுச்சேரியிலும் பாதிப்பு அதிகரித்து வருகின்றன. தற்போதைய நிலவரத்தின் படி புதுச்சேரியில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக காரைக்கால் பகுதியில் கொரோனா அதிகமாக பரவி வருவதால், பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால்- அச்சம் அகன்று மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு அதிகரிப்பு!

காரைக்கால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் அனைவரும் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கே கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வருகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 400 முதல் 600 அளவிலான பரிசோதனை மாதிரிகள் கிடைக்கப்பெறுவதால் நெடுங்காடு, திருநள்ளாறு, கோட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு மாதிரிகள் அனுப்பிவைக்கப்படுகின்றன. இருப்பினும், காரைக்கால் மருத்துவமனைக்கு வரும் மக்களின் கூட்டம் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

காரைக்கால்- அச்சம் அகன்று மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு அதிகரிப்பு!

இந்த நிலையில் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வரும் மக்கள், கொரோனா விழுப்புணர்வுடன் பரிசோதனை செய்து கொள்வது வியப்பளிக்கிறது. கரைக்காலின் சுற்று வட்டாரப்பகுதி மக்களிடையே கொரோனா பற்றிய அச்சம் தெளிந்து விழுப்புணர்வு அதிகமாகி உள்ளது. இதனால் பரிசோதனைக்கு வரும் மக்கள் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பரிசோதனை செய்து கொள்கின்றனர்.