ஓட்டு கேட்க வந்த அதிமுக வேட்பாளரை ஓட ஓட விரட்டிய மக்கள்!

 

ஓட்டு கேட்க வந்த அதிமுக வேட்பாளரை ஓட ஓட விரட்டிய மக்கள்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியில் அதிமுக சார்பில் ஏற்கனவே எம்எல்ஏ-வாக உள்ள இரா.சந்திரசேகர் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்ய கூட்டணியும் மணப்பாறை தொகுதியில் களமிறங்கியுள்ளது. மணப்பாறை தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் திறந்த வாகனத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஓட்டு கேட்க வந்த அதிமுக வேட்பாளரை ஓட ஓட விரட்டிய மக்கள்!

இந்நிலையில் அதிமுகவின் கோட்டையான மணப்பாறை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரசேகரை தொகுதிக்குட்பட்ட மக்கள் ஊருக்கு வர விடாமல் தடுத்து விரட்டி அனுப்புகின்றனர் கடந்த பத்து வருடங்களாக இவரே இத்தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற வேட்பாளராக அதிமுக தலைமையால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.