இணை நோய் ஏதும் இல்லாமல் கொரோனாவால் உயிரிழந்த 8 பேர்.. அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்

 

இணை நோய் ஏதும் இல்லாமல் கொரோனாவால் உயிரிழந்த 8 பேர்.. அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக உயிரிழப்புகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக ஏற்கனவே நுரையீரல் நோய்கள், புற்றுநோய், இதய நோய்கள் உள்ளிட்ட ஏதேனும் இணை நோய்கள் இருப்பவர்களே கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், எந்த இணை நோயும் இல்லாமல் மக்கள் உயிரிழப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துக்கிறது.

இணை நோய் ஏதும் இல்லாமல் கொரோனாவால் உயிரிழந்த 8 பேர்.. அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்

இந்த நிலையில், நேற்று கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக இருந்தது. அதில் 8 பேர் எந்த வித இணை நோயுமே இல்லாமல் உயிரிழந்து விட்டதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் படி, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடந்த 4 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட 30 வயதான இளைஞரும், 39 வயதான மற்றொரு இளைஞரும் இணை நோய் ஏதும் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட சில நாட்களிலேயே உயிரிழந்துள்ளனர். அவர்கள் சோதனை முடிவு வர தாமதமானதாக கூறப்படுகிறது. இதே போல கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 73 வயது மூதாட்டியும் சளி, காய்ச்சலால் சிகிச்சை பெற்று வந்த 52 வயது ஆண், 63 வயது பெண் உயிரிழந்துள்ளனர். மேலும், மற்ற இரண்டு பேரும் அனுமதிக்கப்பட்ட அன்றே உயிரிழந்துள்ளனர்.