5 பைசா பிரியாணிக்காக குவிந்த மக்கள்; திறந்த வேகத்திலேயே கடையை மூடிய ஓனர்!

 

5 பைசா பிரியாணிக்காக குவிந்த மக்கள்; திறந்த வேகத்திலேயே கடையை மூடிய ஓனர்!

மதுரையில் 5 பைசாவுக்கு பிரியாணி வாங்க மக்கள் கூட்டம் குவிந்த போது தள்ளு முள்ளு ஏற்பட்டதால் புதிய ஓட்டல் மூடப்பட்டது.

மதுரை செல்லூர் ரோட்டில் இன்று புதிதாக திறக்கப்பட்ட அசைவ ஓட்டல் திறப்பு விழா சலுகையாக 5 பைசாவுக்கு ஒரு பிரியாணி இலவசம் என சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி முதல் பிரியாணி வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட நிலையில், பிரியாணி வாங்க 11 மணியில் இருந்தே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் மக்கள் குவிந்துள்ளனர். பிரியாணி வழங்கப்படுவதற்கு முன்பாகவே அலைள்கடலென மக்கள் கூட்டம் அங்கு திரண்டுள்ளது.

5 பைசா பிரியாணிக்காக குவிந்த மக்கள்; திறந்த வேகத்திலேயே கடையை மூடிய ஓனர்!

சரியாக 12.45 மணிக்கு பிரியாணி கொடுக்க தொடங்கியுள்ளனர். அப்போது மக்கள் முந்தியடித்துக் கொண்டு முன்னேறி பிரியாணி வாங்க முயன்றதால் மக்களுக்கிடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சமூக இடைவெளி இன்றியும், மாஸ்க் இன்றியும் மக்கள் குவிந்ததால் பதற்றமடைந்த கடைக்காரர் பிரியாணி தீர்ந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார். இதனிடையே, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கூட்டத்தைக் கலைத்தனர். 5 பைசா பிரியாணிக்காக நூற்றுக் கணக்கில் மக்கள் திரண்டதால் அங்கு சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.