‘டாஸ்மாக்கில் குவிந்த குடிமகன்கள்’..நேற்று ஒரே நாளில் ரூ.183 கோடிக்கு மது விற்பனை!

 

‘டாஸ்மாக்கில் குவிந்த குடிமகன்கள்’..நேற்று ஒரே நாளில் ரூ.183 கோடிக்கு மது விற்பனை!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 4,807 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,65,714 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 84,598 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஜூலை 31 வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் 31 ஆம் தேதி வரை வரும் எல்லா ஞாயிற்று கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி, முழு பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

‘டாஸ்மாக்கில் குவிந்த குடிமகன்கள்’..நேற்று ஒரே நாளில் ரூ.183 கோடிக்கு மது விற்பனை!

இதனால் ஞாயிற்று கிழமைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ள, முந்தைய தினமே மக்கள் கூட்டம் கடைகளில் குவிந்து வருகிறது. இந்த நிலையில், இன்று பொதுமுடக்கம் என்பதால் நேற்று ஒரே நாளில் மதுக்கடைகளில் ரூ.183 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ.42.1 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.41.3 கோடிக்கும் சேலம் மண்டலத்தில் ரூ.40.4 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது. மேலும், கோவை மண்டலத்தில் ரூ.37.9 கோடிக்கும் சென்னை மண்டலத்தில் ரூ.21.2 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது.