2 வாரம் முழு ஊரடங்கு… மார்கெட்டுகளில் குவியும் மக்கள் : ஸ்தம்பித்த போக்குவரத்து

2 வாரம் முழு ஊரடங்கு… மார்கெட்டுகளில் குவியும் மக்கள் : ஸ்தம்பித்த போக்குவரத்து

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 28 ஆயிரம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டுமே 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவானது. இவ்வாறு கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் பன்மடங்கு அதிகரித்து வருவதால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு திடீர் அறிவிப்பை வெளியிட்டது.

2 வாரம் முழு ஊரடங்கு… மார்கெட்டுகளில் குவியும் மக்கள் : ஸ்தம்பித்த போக்குவரத்து

அதாவது வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் ஊரடங்கு நாட்களில் அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற இதற்கும் அனுமதி வழங்கப்படாது என்றும் காய்கறி, பலசரக்கு, இறைச்சி உள்ளிட்ட கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் அறிவித்தது. மேலும், மக்கள் 2 வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

2 வாரம் முழு ஊரடங்கு… மார்கெட்டுகளில் குவியும் மக்கள் : ஸ்தம்பித்த போக்குவரத்து

ஊரடங்கு நாட்களில் குறைந்த நேரத்தில் கடைகள் இயங்கும் என்பதால், பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவக் கூடும். இதை கருத்தில் கொண்டு மக்கள் காய்கறி, மளிகை கடைகளில் அதிகளவு குவிந்து வருகின்றனர். சென்னை மட்டுமின்றி திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மார்க்கெட் மற்றும் மொத்த மளிகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், பல இடங்களில் கடும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.