நீட் பாதிப்பு குறித்து மக்கள் கருத்து கூறலாம் : முக்கிய அறிவிப்பு இதோ!

 

நீட் பாதிப்பு குறித்து  மக்கள் கருத்து கூறலாம் : முக்கிய அறிவிப்பு இதோ!

நீட் தேர்வு பாதிப்பு குறித்து மக்கள் கருத்து கூறலாம் என்று ஏ.கே.ராஜன் குழு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். கிராமப்புற ,நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ,தமிழ் வழியில் கல்வி பயில்வோர் போன்ற நமது சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பும் மறுக்கப்பட்டு வரும் நிலை உள்ளதாக கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் . இதனைக் கருதியே சமூகநீதிக்கு எதிரான இந்த நீட் தேர்வு முறை கைவிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

நீட் பாதிப்பு குறித்து  மக்கள் கருத்து கூறலாம் : முக்கிய அறிவிப்பு இதோ!

நீட் தேர்வினால் மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா ? என்பது குறித்து ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைகளை அளித்திட ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ. கே. ராஜன் அவர்கள் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நீட் பாதிப்பு குறித்து  மக்கள் கருத்து கூறலாம் : முக்கிய அறிவிப்பு இதோ!

இந்நிலையில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் வரும் 23ம் தேதிக்குள் அஞ்சல் வழியாகவோ, neetimpact2021@gmail.com என்ற இமெயில் வழியாகவோ தங்களது கருத்துக்களை அனுப்பலாம் என்று நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி தெரிவித்துள்ளது.  நீட் தேர்வின் தாக்கம் பற்றி ஆராயும் குழுவில் டாக்டர்கள் ஜி.ஆர்.ரவீந்திரநாத், ஜவஹர் நேசன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.