‘8 மாதங்களுக்கு பிறகு’ சுற்றுலா தலங்களில் அனுமதி: குஷியில் பொதுமக்கள்!

‘8 மாதங்களுக்கு பிறகு’ சுற்றுலா தலங்களில் அனுமதி: குஷியில் பொதுமக்கள்!

கொரோனா அச்சுறுத்தலால் 8 மாதங்களுக்கு பிறகு தமிழகம் முழுவதிலும் சுற்றுலா தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

‘8 மாதங்களுக்கு பிறகு’ சுற்றுலா தலங்களில் அனுமதி: குஷியில் பொதுமக்கள்!

கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் மெரினா உட்பட அனைத்து கடற்கரைகளும் மூடப்பட்டு, பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பொதுவாக மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், ஊரடங்கில் தளர்வுகள் அளித்த போதிலும் மெரினாவில் மக்கள் அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து, மெரினாவை திறக்கக்கோரி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 14ம் தேதி அனைத்து கடற்கரைகளையும் திறக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

‘8 மாதங்களுக்கு பிறகு’ சுற்றுலா தலங்களில் அனுமதி: குஷியில் பொதுமக்கள்!

அதன் படி, தற்போது மெரினா கடற்கரை உட்பட தமிழகத்தின் அனைத்து கடற்கரைகள், நீர்நிலைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் பொதுமக்களுக்கு இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையை மக்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. நீலாங்கரை, திருவான்மியூர், மாமல்லபுரம் உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளும் திறக்கப்பட்டதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாமல்லபுரத்தில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை 2000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.